பக்கங்கள்

திங்கள், 14 ஜனவரி, 2013

நான் செத்தபிறகு செருப்பால் அடி

நான் செத்தபிறகு செருப்பால் அடி

மரம் : கிஷோரி ஓவியம்
ஓவியம் : கிஷோரி சந்தர் 
என் பாட்டன் வைத்த
மரத்தில்
குருவிகளும் ,காக்கைகளும்,
வாழ்ந்தன
தாத்தாவின் ஆன்மாவும் 
குடியிருக்க கூடும்

எப்போதாவது கிராமம்
செல்கையில்
நானும் அந்த மரத்து நிழலில்
நின்று வருவேன்

நிழலின் அருமையும்
நிழல் தரும்
மரத்தின் அருமையும்
வெய்யிலில் தெரியும்

சென்ற ஆண்டு அந்த
மரத்தை ரியல் எஸ்டேட்
கயவர்கள் வெட்டி விட்டார்கள்

என் பாட்டன் சாகும் போது
நான் பிறந்திருக்கவில்லை
என் பாட்டனின் மரம்
சாகும் போது
நான் தடுக்கவில்லை

"உங்க அப்பன்,பாட்டன்
செத்தா வருந்தும் நீங்கள்
அவர்கள் நட்ட
மரத்தை இரக்கமில்லாமல்
கொன்று போடுவீர்கள்"

என்னை என்னால்
செருப்பால் அடிக்க
வெட்கமாக இருக்கிறது
தாத்தா நீயே
நான் செத்தபிறகு
செருப்பால் அடி

ஒரு மரத்தைக் கூட
காப்பாற்ற துப்பில்லை
எனக்கு

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Sunday, June 3, 2012

மாதர்

தகப்பனிடம்
திட்டு வாங்கியவள்
காதலனிடம்
கற்பை தொலைத்தவள்
கணவனிடம்
கட்டிலை தொலைத்தவள்
பிள்ளைகளால்
துரத்தப் பட்டவள்
ஆடு ,மாடு போல
அலைக்கழிக்கப் பட்டவள்
தெரு நாயைப் போல்
நடத்தப் பட்டவள்
வாயிருக்கும் ஊமை !
அப்பாவி பெண் ,நான்
சோதரர்களே
"மாதர் தம்மை
இழிவு செய்தல் "மடமை"
என்று கூட தெரியாத
நீங்களா
மடமையை
கொளுத்தப் போகிறீர்கள் ??" 

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Friday, April 27, 2012

காசாக்குகிறான்

பிச்சைக்காரன்
கருணையை காசாக்குகிறான்

ஆன்மிகவாதி
கடவுளை காசாக்குகிறான்

நாத்திகவாதி
பகுத்தறிவை காசாக்குகிறான்

அரசியல்வாதி
எல்லாவற்றையும் காசாக்குகிறான் 

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Friday, April 13, 2012

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்
மனித மனமாழ் குப்பைத்தொட்டி 
இன்னொரு பக்கம் பார்த்தால் 
எனக்குள் இருக்கிறான் 
ஒரு வஞ்சகன் ,
ஒரு திருடன்,
ஒரு கொலைகாரன்,
ஒரு தீவிரவாதி,
ஒரு சூழ்ச்சியன் ,
ஒரு துரோகி,
அரை தூக்கத்தில் ஒரு காமவெறியன்..
வெளியில் பார்க்கும் 
உங்களுக்கு எப்பொழுதும் 
நான் நல்லவன்; மிக நல்லவன் 
இனியன்,கனியன்,அமுதன் 
பழக,பேச,உறவாட சிறந்தோன் 
எனவே 
மறக்காமல் எனக்கே ஓட்டுப்போடுங்கள் !
   
தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Friday, April 6, 2012

ஒரு கேள்வி ?

தோழர்களே ,
வளர்ந்த மரங்களை
வெட்டி விட்டு
கட்டிடங்கள் வளர்ப்பது தான்
வளர்ச்சியா ?

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Friday, March 16, 2012

தேர்தல்

அண்ட புளுகு ஆகாச புளுகு
கண்ட மதிரும் நிலநடுக்க புளுகு
ஏற்றிக் கொண்டு வருகுது தேர்தல் !

கரும்புள்ளி கையில் வைத்து விட்டு
கரும்பாய் அறிக்கை உதிர்த்து விட்டு
ஏழைகள் வயிற்றில் அடிக்குது தேர்தல் !

சனநாயகம் தோற்று போயிற்று இங்கே
பணநாயகம் மற்றும் பதவியில் அமர
இலகுவாய் வழி செய்யுது தேர்தல் !

பிரியாணிக்கும் குவாட்டருகும் கூடும் கூட்டம்
வரிபணத்தை களவு செய்வதில் நாட்டம்
எலெக்ட்ரானிக் சாதனமாய் மாறியது தேர்தல் !

குடவோலை சோழன் கொடுத்தது தேர்தல்
குடங்குடமாய் இலவசம் கொடுக்குது தேர்தல்
மக்களின் கண்ணீரையும் ஓட்டாகுது தேர்தல் !

மக்களாட்சி என்றால் மக்களின் ஆட்சியாகும்
மக்களை ஏமாற்றி அமைக்கும் ஆட்சியாகுமா ?
இனிமேலாவது புரிந்து கொள்ளாதா இத்தேர்தல் ...

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Saturday, March 10, 2012

அவர்களிடம் கேட்டோம்

அவர்களிடம் கேட்டோம்
சிறுபான்மையினர் என்றனர்
உரக்க கேட்டோம்
தாழ்த்தப்பட்டோர் என்றனர்
போராடி கேட்டோம்
துப்பாக்கியை நீட்டினர் !

நாங்கள் சமூகத்திலிருந்து
விடுதலை கேட்கவில்லை
எங்களுக்கு தேவை
சமூக விடுதலையே !

நாங்கள் நிலம் கேட்டு
போராடவில்லை
இருக்கும் நிலத்தை அபகரிக்காதீர்
என்றே போராடுகிறோம் !

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Friday, March 9, 2012

உடம்புக்கு சரியில்லை

காய்ச்சல் வந்தது
அரசு மருத்துவமனைக்குச் சென்றேன் ..
மருத்துவமனை நோயுற்று இருந்தது

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

எங்கள் நிலம்

ஒரு காலத்தில் 
ஆங்கிலேயன் வந்தான் 
எங்கள் நிலத்தில் 
கருவேலம் நட்டான் ...
....................
நாங்கள் சீர்செய்தோம் 
பயிர் செய்தோம் 
................
இப்போது ,
அரசியல்வாதி வந்தான் 
எங்கள் நிலத்தையே 
எடுத்துக்கொண்டு போகிறான் !!!

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Thursday, March 8, 2012

கண்ணீரின் நிறம் சிவப்பு

கண்ணீரின் நிறம் மட்டும்
சிவப்பாய் இருக்குமெனில்
என் தமிழினத்தின்
முகம் சிவப்பாய் தான்
இருந்திருக்கும் !!!!

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Tuesday, March 6, 2012

காக்கா கவிதை

வடையை வைத்துக் கொண்டிருந்த
காக்கையிடம்
“வடை தாயேன் “ என்றது நரி
“ம்ம்ஹும்” காக்கா தரவில்லை
நரி யோசித்தது
“கரிய நிற காந்த காக்கா
அறிய வகை பறவை காக்கா
இலவசமாக உனக்கு கூடு
தினமும் இலவச சாப்பாடு
இலவச முட்டை காப்பகம்
இலவச பறவைகள் சரணாலயம்
எல்லாம் தருகிறேன் “
வாக்குறுதி கொடுத்தது நரி
உழைப்பை மறந்த காக்கை
இலவச ஆசை கொண்ட காக்கை
வடையை நரியிடம் கொடுத்தது!!
நரி வடையை தின்றுவிட்டு
வாலை ஆட்டியாட்டி நடந்தது
நரியை பற்றி நமக்கு தெரியாதா ???
வடை போச்சே .................... 

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Sunday, March 4, 2012

உருப்படமாட்டீர்கள் !!

அரசியல்வாதியின் கையில்
அட்சயபாத்திரமும்
மக்கள் கையில்
பிச்சைப்பாத்திரமும்
கொடுக்கும் ,நீங்கள்
உருப்படமாட்டீர்கள் !!

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Wednesday, February 29, 2012

மன்னராட்சி

நான் அரசியல்வாதி,
என் மகன் அரசியல்வாதி,
பேரன் அரசியல்வாதி ,
கொள்ளு பேரனுக்கு
அரசியல் எதிர்காலம் உண்டு ..
ஹா ...ஹா ...
இது நீங்கள் ஓட்டுபோட்டு
தேர்ந்தெடுக்கும் ,மன்னராட்சி ........

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Monday, February 20, 2012

மக்களாட்சி

மன்னராட்சியில்
   நாட்டுக்கு ஒரு ராஜா!
மக்களாட்சியில்
   வார்டுக்கு ஒரு ராஜா! 

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Thursday, February 9, 2012

கலாச்சாரம்

பெண்களின் உடைக்குறைப்பில்
கலாசாரம் சீரழிகிறது என்றால்
தைக்கவேண்டும் ஒரு கருப்புத்துணி
ஆண்களின் கண்களை மூட !!!

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Sunday, January 29, 2012

நெடுஞ்சாலை

பாட்டன் வாழ்ந்த வீட்டை
நெடுஞ்சாலை உண்டது ...
பொக்கலைன் இயந்திரங்கள்
ஆக்ரோஷமாய் சுவர்களை
இடித்த போது...
தந்தையின் கண்ணில் முதல் முறை
கண்ணீர் சுரந்தது ...
மரங்கள் சாய கூட்டை இழந்த
பறவையாய் என் தாய் ....
சிறு வயதில் சுவரில் நான் வரைந்த
ஓவியங்கள் மரணத்தில் துடித்தது
.........
வழுக்கிக் கொண்டு செல்லும்
வாகனங்களுக்கு தெரியப்போவதில்லை
இந்த உதிரங்களின் துயரம் ..
ஒரு இழப்பின் உயரம் ..........

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Tuesday, January 3, 2012

வேட்பாளன்

பிச்சைக்காரன் காசை
பிச்சையாக கேட்கிறான்
வேட்பாளன் காசைக்
கொடுத்து வாக்கை
பிச்சையாக கேட்கிறான்
காசு வாங்கிய இருவரும்
பிச்சையராகவே இருக்கின்றனர்

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Thursday, October 27, 2011

சிதறல்கள்

சாதியம் ஒரு முள் செடி...
வேலியாக பயன்படுத்துவதை நிறுத்தி !!
கட்டையாக எரியுங்கள்!!

.................................................................

கடற்கரையில்
கடல் தொடங்குகிறதா? முடிகிறதா?

.................................................................

கடவுளை கேட்கிறேன்..
நீ படைத்தது உண்மையானால்..
ஏன் படைத்தாய் ?

................................................................

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Sunday, April 24, 2011

ஊனமுற்றவர்

ஊனமுற்றவர்
கடவுளின் குழந்தைகள்!!, என்றால்
நீங்கள் சாத்தானின் குழந்தைகளா?

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

Sunday, September 19, 2010

முரண்

குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தை
கூட்டித்துடைக்கிறாள்
பன்னிரண்டு வயது சிறுமி

அன்பர்களே இது எனது ஐம்பதாவது பதிவு
இக்கவிதையை தினமும் உழைத்து உருகும் குழந்தை தொழிலாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

தமிழ்மணத்தில் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த பதிவை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்

கற்பை போன்ற நட்பு

அண்ட புளுகு ஆகாச புளுகு

அண்ட புளுகு ஆகாச புளுகு
கண்ட மதிரும் நிலநடுக்க புளுகு
ஏற்றிக் கொண்டு வருகுது தேர்தல் !

கரும்புள்ளி கையில் வைத்து விட்டு
கரும்பாய் அறிக்கை உதிர்த்து விட்டு
ஏழைகள் வயிற்றில் அடிக்குது தேர்தல் !

சனநாயகம் தோற்று போயிற்று இங்கே
பணநாயகம் மற்றும் பதவியில் அமர
இலகுவாய் வழி செய்யுது தேர்தல் !

பிரியாணிக்கும் குவாட்டருகும் கூடும் கூட்டம்
வரிபணத்தை களவு செய்வதில் நாட்டம்
எலெக்ட்ரானிக் சாதனமாய் மாறியது தேர்தல் !

குடவோலை சோழன் கொடுத்தது தேர்தல்
குடங்குடமாய் இலவசம் கொடுக்குது தேர்தல்
மக்களின் கண்ணீரையும் ஓட்டாகுது தேர்தல் !

மக்களாட்சி என்றால் மக்களின் ஆட்சியாகும்
மக்களை ஏமாற்றி அமைக்கும் ஆட்சியாகுமா ?
இனிமேலாவது புரிந்து கொள்ளாதா இத்தேர்தல்

கிளுகிளு & கிக்கான பரீட்சை

கிளுகிளு & கிக்கான பரீட்சை

மீண்டும் ஒரு IPL காலம்.....

எங்கள் மாலைப் பொழுதுகள் எல்லாம் IPL உடன் மூழ்கிக் கிடக்கின்றன. 
Twitter, Facebook Timeline எல்லாம் IPL இனால் நிறைந்து கிடக்கின்றன..
விலைவாசி முதல் தலைபோகும் அரசியல் பிரச்சினைகளும், வாழ்க்கையின் வேதனைகளும் தற்காலிமாக மறக்கவும் IPL தான் துணை....

இந்த நேரத்தில் தான் முன்னைய இடுகையொன்று ஞாபம் வந்தது...

இதோ ரிப்பீட்டு...

பரீட்சைகள் என்றாலே கசப்பு மருந்தாக, கண்ணில் காட்டாத ஜந்துவாக ஓடி ஒளிக்கும் மாணவர்களுக்கு அதை சுவையாக மாற்றித் தர சில வழிகளை இப்போது இளைஞர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள IPL பாணியில் யோசித்தோம்....

உலகம் முழுக்க IPL மூலமாக கிரிக்கெட் பரபர விற்பனைப் பொருளாக மாறியது போல, பரீட்சையையும் மாணவர்கள் விரும்புகிற ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாற்ற நம்மால் முடிந்த சில ஐடியாக்கள்...

IPL பாணியில் பரீட்சைகள்..

1. பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலமாக மாற்றி,புள்ளிகளை 50ஆக மாற்றிவிடுவது..
2. பதினைந்தாவது நிமிடத்தில் Strategy break அறிமுகப்படுத்தப்படும்.
3. மாணவர்களுக்கு ப்ரீ ஹிட் (Free hit) கொடுப்பது; அவர்களுக்கான கேள்விகளை அவர்களே எழுதி விடைகளையும் அவர்களே எழுத ஒரு வாய்ப்பு
4. முதல் பதினைந்து நிமிடங்கள் Power Play... பரீட்சை அறைக்குள் மேற்பார்வையாளர் இருக்கமாட்டார்.. மாணவரகள் இஷ்டப்படி புகுந்து விளையாடலாம்.
5. கொப்பி அடிக்காமல், பிட் அடிக்காமல் எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த Fair Play விருதுகளை அறிமுகப்படுத்தல்.. (ரொம்ப நல்லவங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்போமே)
6. பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..
இதுவும் ஒரு வகை Free hit தான்.

எல்லா மாணவர்களும் விரும்பப்போகின்ற முக்கியமான விஷயம் இது....

ஒவ்வொரு சரியான விடை எழுதும் நேரமும் ஊக்குவித்து உற்சாகப்படுத்த பரீட்சை மண்டபங்களில் Cheer Girls  இருப்பார்கள்...
மாணவிகள் விரும்பினால் Cheer Boysஉம் ஏற்பாடு செய்யலாம்....

ஹலோ.. எங்கேப்பா எல்லாரும் பரீட்சைகளுக்குப் படிக்கத் தயாராகிறீங்களா? இன்னும் அமுல்படுத்தலீங்க.. நீங்கள் எல்லாம் ஆதரவளித்து இந்த ஐடியாவை வரேவேற்று வெற்றிபெறச் செய்தால் வந்திடும் விரைவில்.
(வாக்குக் குத்துங்கன்னு மறைமுகமாக சொல்றேனாக்கும்)

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் காலை விடியலில் ஏக வரவேற்பைப் பெற்ற விஷயம் இப்போ இடுகையாக..

இதன் ஒரிஜினல் ஆங்கில வடிவம் ;)

arvloshan. thanks

புதன், 9 ஜனவரி, 2013

எப்படி இருந்தவங்க எப்படி ஆய்ட்டாங்க பாத்தீங்களா?

திருமணத்திற்கு  முன்பு 
(அதாவது காதலிக்கும் போது என்று வைத்துக் கொள்ளுங்களேன்)

"அவனும் அவளும்" என்ன பேசினார்கள் ?

அவன் : உம்... காத்துக்கிட்டுருக்கிறது ரொம்ப கஷ்டம்.

அவள் : நீங்க என்னை விட்டுட்டு போயிடமாட்டீங்களே ?

அவன் : இல்லை.. இல்லை.. சத்தியமா இல்லை...

அவள் : நீங்க என்னை விரும்புறீங்களா?

அவன் : நிச்சயமா..

அவள் : நீங்க என்னை ஏமாத்திடுவீங்களா ?

அவன் : மாட்டேன் .. ஏன் இப்படி கேட்டுகிட்டே இருக்கே?

அவள் : நீங்க எனக்கு ஒரு முத்தம் தருவீங்களா?

அவன் : கண்டிப்பா..

அவள் : நீங்க என்னை அடிப்பீங்களா?

அவன் : சான்சே இல்லை.. நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது..

அவள் : நான் உங்களை நம்பலாமா?

அவன் : உம்..

அவள் : அன்பே....

--------------------------------------------------------------------------------------------

திருமணத்திற்கு பின்பு ...

"அவனும் அவளும்" என்ன பேசினார்கள் ?

மேலே கண்ட உரையாடலை கீழிருந்து மேலாக வாசித்துக் கொள்க 

வெள்ளி, 4 ஜனவரி, 2013

வாங்க சிரிக்கலாம்..............(நகைச்சுவை விருந்து)

வாங்க சிரிக்கலாம்..............(நகைச்சுவை விருந்து)

பஸ்ஸில் கண்டக்டரிடம் ஒரு பயணி கேட்டார்: "ஆமாம், ஏன் காலை அகட்டி வச்சு
நிக்கிறீங்க?

கண்டக்டர்: "பேலன்ஸுக்கு. ஆமாம், நீங்களும் ஏன் காலை அகட்டி வச்சு
நிக்கிறீங்க?"

பயணி:"நானும் பேலன்ஸுக்குத தான் நிக்கிறேன். பத்து ரூபாய் குடுத்ததுக்கு
டிக்கட் சார்ஜ் போக மீதி குடுங்க சார்"

..............................................................................................
விவாதத்திலே நேரங்கழித்தல் -
நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்.

.........................................................................................
பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒ ரு பின்
படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும்.

நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என
போர்டு போட்டிருக்கே

.................................................................................................

துட்ட வட்டிக்கு விட்டா தண்டலு
துப்பட்டால மனசை விட்டா மென்டலு

..............................................................................................
பெண் : சார் நான் மாசமா இருக்கேன்..

மேனேஜர் : அதுக்கு ஏம்மா??

பெண் : நீங்கதானே சொன்னீங்க. மாசமான சம்பளம் தரலாம்னு..

.............................................................................................
சில நேரங்களில் அவமானங்களும் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்..
நமபிக்கையும் பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால்

...........................................................................................
எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை
ஆனால் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வதில்லை

...............................................................................................
கிரிக்கெட் ப்ளேயருக்கும், காலேஜ் பிகருக்கும் என்ன வித்தியாசம்?
கிரிக்கெட் பிளேயர் *BAT*ல அடிப்பார்
காலேஜ் பிகர் *BATA*ல அடிப்பா

..............................................................................................
ஒருத்தர் பஸ்ஸில் பயணப்படும் போது திடீரென் ஓட்டுனர் பிரேக் போட அவர் முன்னால்
நின்ற பெண்மீது இடித்துவிட்டார்.. அவர் சுதாகரித்துக்கொண்டு எழும்முன்...

பெண் : ஏய், நீ என்னப்பண்ணிக்கிட்டிருக்க..?????
நம்மாளு: பஞ்சாப் யூனிவர்ஸிட்டில் பைனல் இயர் B.E.

..............................................................................................
விரும்பும்போது விரும்பினேன் என்பதைவிட
வெறுக்கும்போதும் விரும்பினேன் என்பதே
உண்மை அன்பு

................................................................................................
“இகழ்ச்சி” 
என்னை துணிந்து நில் 
என்றது

“புகழ்ச்சி” 
என்னை பணிந்து செல் 
என்றது.

................................................................................................

டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.

இந்த டானிக்கை சாப்பிடுங்க.

சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?

நல்லா இருமலாம்.

..............................................................................................

கம்பியூட்டரை தட்டினால் அது என்ன நினைக்குமாம்?
இன்டெல் இன்சைட் ; மெண்டல் அவுட்சைட்'ன்னு 

..................................................................................................
டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...

நோயாளி: ஏன் டாக்டர்?

டாக்டர்: ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே

...........................................................................................
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...
·  

...........................................................................................

வாழ்க்கையும் ஆசிரியரும் ஒரே போல

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.

ஆசிரியல் பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைக்கிறார்
வாழ்க்கை தேர்வை வைத்து ரிசல்ட் மூலம் பாடம் சொல்லித்தருகிறது.

..............................................................................................
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..

நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..

போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..

...............................................................................................

அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே.. 
ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற??? 
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி..
...............................................................................................
ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!

................................................................................................

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ???

................................................................................................

குடி போதையில் வண்டி ஓட்டக்கூடாதுனா ,பார்ல எதுக்கு பார்க்கிங் வச்சிருக்காங்க???? 

.குரங்குல இருந்துதான் மனிதன் வந்தான் என்றால் எப்படி குரங்குகள் இன்று வரை இருக்கிறது????

நம்ம நாட்டுல பேச சுதந்திரம் இருக்குனா நாம எதுக்கு செல்லுக்கு bill கட்டணும்??? 

நீலச் சிலுவைச்(Blue cross) சங்கம்னு ஒன்னு இருந்தா இந்த அசைவ ஹோட்டல்லாம் எப்படி நடக்குது??
...

.........................................................................................

ஜாலியான அட்வைஸ் கதை 

டாஸ்மாக் மூடுகிற நேரத்தில், கடைசியாக நாலு பேர் உள்ளே போனார்கள். சற்றுத் தொலைவில் கான்ஸ்டபிள் காத்துக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு கேஸ் பாக்கியிருக்கிறது. குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்க்காக ஒரே ஒருவன் சிக்கிவிட்டால், இன்றைய கோட்டா ஓவர்.

பதினைந்து நிமிடம் கடந்தது. டாஸ்மாக்கில் விளக்குகள் அணைந்தன. முதல் ஆள் வெளியே வந்தான். அப்படி ஒன்றும் ஆட்டமில்லை. கொஞ்சம் ஸ்டெடிதான். அடுத்த ஆள் வாட்டர் பாக்கெட்டை வீசி எறிந்தபடியே உடனே வந்தான். அவனும் பெரிதாகத் தள்ளாடவில்லை. மூன்றாவது ஆளும் நான்காவது ஆளும் ஒன்றாக வெளியே வந்தார்கள். மூன்றாவது ஆளின் கையில் கடைசி பெக். வாசலிலேயே குடித்தான். நான்காவது ஆளுக்கு நிற்கவே முடியவில்லை. அவனை மற்ற அனைவரும் சேர்ந்து தோளில் தாங்கியபடி கார் சீட்டில் உட்கார வைத்தார்கள். 

”மச்சான் பார்த்துடா . . . ஜாக்கிரதையா போயிடுவல்ல” 
”ழோ..ழோ..பிழாப்ளம். ழான் பாழத்துழ்கறேன்”, அவனைப் போலவே அவனுடைய குரலும் தள்ளாடியது.

மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு அவரவர் பைக்கில் தள்ளாடியபடியே ஏறிப் போனார்கள். கடைசி ஆள் இன்னமும் கார் சாவியை துளாவிக் கொண்டிருந்தான். 

”கார் வச்சிருக்கானா? நல்ல வெயிட் பார்ட்டி சிக்கிருச்சி, மீட்டர் போட்டுற வேண்டியதுதான்.” கான்ஸ்டபிள் முகத்தில் புன்னகை. 

”மிஸ்டர் காரை விட்டு இறங்கு” 
”எழுதுக்கு?”
”நீ குடிச்சிருக்க. குடிச்சிட்டு கார் ஓட்ட உன்னை அனுமதிக்க முடியாது. நல்லா வசமா மாட்டிக்கிட்ட”
”யாழ் சொழ்னது நாழ்ன் குழ்டிச்சிழுக்கேன்னு. நாழ்ன் குழ்டிக்கல”
”மிஸ்டர் நான் நினைச்சா உன் டிரைவிங் லைசென்ஸ்சையே கேன்சல் பண்ணிடுவேன். ஆயிரம் ரூபா குடுத்துட்டா உன்னை விட்டுடறேன். ஓடிப்போயிடு”
”சாழ்ர் . . . நாழ்ன் குழ்டிக்கல”
”டாய் யாருகிட்ட பொய் சொல்ற? ஊதுடா?”

அந்த இளைஞன் ஊதினான். என்ன ஆச்சரியம்? குடி நாற்றத்தை கண்டுபிடிக்கிற மீட்டரில் ஒரு சிறு அசைவு கூட இல்லை. 
”டாய் . . . நல்லா ஊதுடா”, இந்த முறை கான்ஸ்டபிள் தனது மூக்காலயே அவன் ஊதியதை மோப்பம் பிடித்தார். துளி கூட சரக்கு நாற்றம் வரவில்லை.
”டேய், உண்மையை சொல்லிடு. கொஞ்சம் கூட வாய் நாறல. எப்படிடா அது?”

”அட அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல சார்”., பேசிக் கொண்டே கார் சாவியை கரெக்டாக செருகினான். 
”தினமும் எல்லாருமே குடிப்போம். ஆனா ஒருத்தர் மட்டும் குடிச்சா மாதிரி நடிப்போம்”
”எதுக்கு?”
”உங்கள மாதிரி ஆளுங்கள ஏமாத்தறதுக்குதான் . . .வரட்டா”, காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டைலாகப் பறந்தான் அவன்.

நீதி

மது அருந்தாதீர்கள். மது அருந்தாவிட்டால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மது அருந்துபவர்களையும் காப்பாற்றலாம்.

................................................................................................

உடல் உறுப்புகளில் எங்காவது வலி ஏற்பட்டால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக்கொள் என்பார்கள்

ஆனால் அந்த‌ பல்லுக்கே வலி ஏற்பட்டால் ??

..............................................................................................

அது என்னவோ தெரியவில்லை பசங்க அண்ணான்னு சொல்லும்போது வரும் சந்தோசம் பொண்ணுங்க அண்ணான்னு சொல்லும்போது வருவதில்லை

நன்றி
Ranga nathan