சில ஜோக்ஸ் : படித்தவை ( 2 )
ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள் வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச படியே உயிரை விட்டிருந்தன. அவரோட போலீஸ் மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட் மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார். "அதெப்படி ஒரே சமயத்தில வந்த மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டிருக்கு"
முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60 வயசு தன்னோட மனைவியோட சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக் வந்து அப்படியே போய்ட்டார்.
"சரி, இது ? " இரண்டாவத சுட்டி காட்டினார்.
அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25 வயசுதான். லாட்டரியில் லட்ச ரூபா அடிச்சது சந்தோசத்தில ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப் போய்ட்டான்.
மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இதுக்கு என்ன சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப் போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன் யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு சிரிச்சிட்டு இருந்திருக்கான். அப்படியே பொசுங்கி போய்ட்டான்.
*****************************************************************************
மனிதர்களை தின்னும் ஒரு கூட்டம் அதில் ஒரு அப்பாவும் மகனும், சாப்பிட மனுசங்கள தேடி ரொம்ப தொலைவு நடந்தாங்க.
கொஞ்ச தூரத்தில ஒரு ஆள் நாய வாக்கிங் கூட்டிட்டு போய்டிருந்தான்.
" அப்பா அந்த ஆளு..." கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.
"இவ வேண்டாம்பா...இவன நாய்க்கு தான் போடனும்." உதட்டை பிதுக்கிட்டான் அப்பா.
இன்னும் கொஞ்ச தூரம் போனாங்க...ஒரு ஆள் நல்லா குண்டா இருந்தான்.
" அப்பா..." மறுபடியும் கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.
இவன் வேண்டாம் இவன தின்னா நமக்கு கொழுப்பு சாஸ்தியா பூடும். நாம ஹார்ட் அட்டாக் வந்து சாக வேண்டியது தான். வுட்டுடு.
பையனுக்கு பசி தாளமுடியல.
அடுத்து அழகான ஒரு லேடி வந்தா..
"அப்பா... இவ வேண்டாம்டா"
ஏம்பா ?
அழகா இருக்காடா...!
"இவள இப்படியே உட்றுவோம் முதல் உங்க அம்மாவ சாப்பிட்டரலாம். வா"
******************************************************************************
துணி கடை ஒன்றில் மனைவி புடவை செலக்ட் செய்யும் வரை காத்திருந்த கணவன் :
சரி சரி செலக்ட் பண்ணிட்டியா பில் போட்டுரலாமா ?
நீங்க யாரு..?
?? அடிப்பாவி ஒருநாள் பூரா காத்துகிட்டிருக்கேன் அதுக்குள்ள என்ன மறந்திட்டியா...
சாரீங்க
சரி சரி
அதில்ல நீங்க..மிதிச்சிட்டிருக்கிறது என் சாரீங்க..
====================================================================
கணவன் : மனைவி
ஏங்க உங்களுக்கு 4 கர்சீப் வாங்கி வந்திருக்கேன்...
வெரி குட் நல்லாருக்கு.
சரி ஆயிர ரூபா குடுங்க...
என்ன 4 கர்சீப்க்கு இந்த விலையா ? அநியாயமாயிருக்கே...
அதில்லீங்க...ஒரு புடவை வாங்கினா 4 கர்சீப் ஃப்ரீ...
======================================================================
இரண்டு பெண்கள்
கண்டக்டரை கட்டி கிட்டது தப்பா போச்சு
கொஞ்ச நேரம் வாசப்படியில நின்னாகூட உள்ள போ...உள்ள போங்கரார்.
இது பரவாயில்ல மெக்கானிக்க கட்டிக்கிட்டது தப்பா போச்சு
ஏன் ?
எப்பவும் கட்டிலுக்கு அடியில படுத்துதான் தூங்குறார் ?
======================================================================
டி.வி பார்த்துக்கொண்டிருந்த கணவரிடம் ;
சமையல் அறையில் இருந்து வேக வேகமா வந்த மனைவி ஏங்க நீயூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் சாரி கட்டியிருந்துச்சு
கவனிக்கலயே...
ஆமா...போங்க..நீங்க..நீயுஸ் பாக்கிற லட்சணம்..
அப்பாவி கணவன் : ஙே...
======================================================================
எனக்கு அபரேசனா ? ரொம்ப பயமா இருக்கு டாக்டர்.
நாங்க இருக்கோம் உங்களுக்கு எதுக்கு பயம் ?
நீங்க இருப்பீங்க டாக்டர் அபரேசன் செஞ்சிக்க போறது நான் தானே..
======================================================================
மூணு நாளா கேஸ் ப்ராப்ளம்..
அதுக்கு என்ன...கேஸ் கம்பெனிக்கு போன் செஞ்சீங்களா...
சரீங்க கண்டக்டர்
யோவ் நான் டாக்டர் யா..
அதத்தானே கேட்டேன்
======================================================================
இது இன்னும் கொஞ்சம் பழசு...
அப்பா நம்ம வீட்டு கன்னுக்குட்டி ஹம்மா.. ஹம்மா ன்னு கத்துதுப்பா
சரிடா அதுவும் ஏ ஆர் ரகுமான் விசிறியாயிடுச்சா...
======================================================================
கணவன் : மனைவி
ஆஹா...நான் உதச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ உதச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே.
ஹி..ஹி...உங்கம்மாவ நெனச்சு உதச்சங்க.. அவ்ளோதான்.
======================================================================
இரண்டு பெண்கள்:
அதோ போறாளே அவ சுத்த அடங்கா பிடாறி..
அனா அவ மாமியார் நல்லவங்க..
அது யாரு...
ஹி..ஹி..நான்தேன்.
======================================================================
ரெண்டு மணிக்கு வீட்டில் நுழைந்த திருடனை அடித்து உதைத்துவிட்டாள்.
இன்ஸ்பெக்டர் :
வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது..
லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப் புட்டேனுங்க..
======================================================================
போலீஸ் ஸ்டேசனில் கணவன்
சார் எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...
எத்தனை நாளா..?
மூனு மாசமா சார்...
அதுக்கு இப்ப கம்ளைண்ட் குடுக்கிற...
இப்ப தான் சார் குறி பார்த்து வீசுறா..
======================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக