அண்ட
புளுகு ஆகாச புளுகு
கண்ட
மதிரும் நிலநடுக்க புளுகு
ஏற்றிக் கொண்டு வருகுது தேர்தல் !
கரும்புள்ளி கையில் வைத்து விட்டு
கரும்பாய் அறிக்கை உதிர்த்து விட்டு
ஏழைகள்
வயிற்றில் அடிக்குது தேர்தல் !
சனநாயகம் தோற்று போயிற்று இங்கே
பணநாயகம் மற்றும் பதவியில் அமர
இலகுவாய் வழி செய்யுது தேர்தல் !
பிரியாணிக்கும் குவாட்டருகும் கூடும் கூட்டம்
வரிபணத்தை களவு செய்வதில் நாட்டம்
எலெக்ட்ரானிக் சாதனமாய் மாறியது தேர்தல் !
குடவோலை சோழன் கொடுத்தது தேர்தல்
குடங்குடமாய் இலவசம் கொடுக்குது தேர்தல்
மக்களின் கண்ணீரையும் ஓட்டாகுது தேர்தல் !
மக்களாட்சி என்றால் மக்களின் ஆட்சியாகும்
மக்களை
ஏமாற்றி அமைக்கும் ஆட்சியாகுமா ?
இனிமேலாவது புரிந்து கொள்ளாதா இத்தேர்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக