மாணவன் : செய்யாத தப்புக்கு தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
மாணவன் : நான் ஹோம்வொர்க் பண்ணல சார்.
அவர் : ஏங்க, பஸ் ஏர்றதுக்கு எங்க நிக்கணும்?
இவர் : நடு ரோட்ல நிக்கணும்.
----------------------------------------------------------------------
மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு : ஏன் அவன கொன்ன?
புலி : அந்தப் பரதேசி நாயி மூணு மணி நேரமா என்னப் பாத்து சொல்றான் “எவ்ளோ பெரிய பூன”ன்னு.
-------------------------------------------------------------------------
நண்பன் 1 : மாப்ள, லவ் மேரேஜ்-க்கும், அரேஞ் மேரேஜ்-க்கும் என்னடா வித்தியாசம்?
நண்பன் 2 : அது ஒண்ணுமில்ல மாமு, நம்மலா கெணத்துல விழுந்தா அது லவ் மேரேஜ், 10 பேரு சேந்து தள்ளிவிட்டா அது அரேஞ் மேரேஜ்.
------------------------------------------------------------------------
அவன் : ஹலோ என்ன இது? 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தாரீங்க?
இவன் : இதான் கடன திருப்பித் தாரது.
------------------------------------------------------------------------
அவர் : என்னோட பையன் தான் ஸ்கூல்லயே நம்பர் ஒன்!
இவர் : அப்படியா!
அவர் : ஆமா, காலைல 7 மணிக்கெல்லாம் ஸ்கூலுக்கு மொத ஆளா
போய்டுவான்!!
-----------------------------------------------------------------------
தொண்டன் : தலைவரே, கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவன ஏன் துரத்திட்டீங்க?
தலைவர் : பின்ன என்னய்யா, T.V. பொட்டிய காட்டி ‘மானிட்டர்’னு சொல்றான். மானிட்டர்-னா சரக்குன்னு கூட தெரியாத ஒருத்தன்கிட்ட நான் என்னத்த கத்துக்கிறது.
-----------------------------------------------------------------------
அவர் : ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும்?
கொஞ்சம் பெரிசா பாருங்களேன்.
ரூம் பாய் : யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு.
---------------------------------------------------------------------
அவன் : கிளைமாக்ஸ்ல ஹீரோ துணிக்குள்ள கையவிட்டு ஏதோ
செய்றாரே என்ன அது?
இவன் : ம்..... மர்ம முடிச்ச அவிழ்க்கிறாராம்.
-----------------------------------------------------------------------
மேனேஜர் : எங்க ஆபீஸ்ல கூட்டிப் பெருக்க ஒரு ஆள் வேணும்
நண்பர் : முன் அனுபவம் இருக்கணுமா?
மேனேஜர் : ஏதாவது ஒரு ஆபீஸ்ல 5 வருசம் குப்ப கொட்டிருந்தா போதும்.
---------------------------------------------------------------------------
அவர் : தவிச்ச வாய்க்கு தண்ணி தராதவன் உருப்படுவானா?
குடிகாரர் : உன்ன யார்ரா டாஸ்மாக்ல போய் கேட்கச் சொன்னது?
----------------------------------------------------------------------------
அவள் : என் கணவர் தினமும் குடிச்சிட்டு வந்தா நான் பக்கத்துலயே
போகமாட்டேன்.
இவள் : அதான் அவர் தினமும் குடிச்சிட்டு வர்றாரா?
manasaali.blogspot thaanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக