பக்கங்கள்

திங்கள், 15 அக்டோபர், 2012

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..




கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
"பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்."
"நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"
___________________________________________________________
அந்தத் தம்பதிக்கு பல வருஷங்களாக குழந்தைகள் இல்லை. மனைவி ஒரு லேடி டாக்டரையும் கணவன் ஒரு டாக்டரையும் பார்க்கப் போனார்கள்.
வீடு திரும்பிய மனைவி உற்சாகமாக இருந்தாள்.
"என்னங்க ஒரு குட் நியூஸ்."
"என்ன அது?"
"நான் மாசமா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க போன விஷயம் என்ன ஆச்சு?"
"பேட் நியூஸ்"
"அதான் என்கிட்டே குழந்தை பிறக்கப் போகுதுன்னே சொல்லிட்டாங்களே..இன்னும் என்ன பேட் நியூஸ்?"
"ஒரு பெண்ணை தாயாக்கற தகுதி எனக்கில்லைன்னு கன்பார்மா சொன்னாரு"
___________________________________________________________
"என்னங்க இது, சதா கைவலி, கால்வலி, முதுகு புடிச்சிகிச்சு, இடுப்பு புடிச்சிகிச்சுன்னு முணகிகிட்டே இருக்காங்க உங்கம்மா"
 "எங்கம்மா வயசுக்கு வந்தாத் தெரியும் உனக்கு"
 "இன்னும் அவங்க வயசுக்கே வர்லியா? பின்னே நீங்கள்ளாம் வளர்ப்புப் பிள்ளைங்களா?"
"அடச்சீ…. அம்மா வயசுக்கு நீ வந்தாப் புரியும்ன்னு சொன்னேன்"
"நான் ஏன் அவங்க வயசுக்கு வரணும்? அடுத்தவங்க மேட்டர்ல நான் தலையிடறது இல்லை. நான் என் வயசுக்குத்தான் வருவேன்"
----------------------------------------------------------------------------------------
"என்னது, மாமா வேலை பார்க்கிறதிலதான் உங்க குடும்பமே பிழைக்குதா?"
"ஆமாம்டா, எங்க மாமா மட்டும்தான் வேலை பார்க்கறார்"
___________________________________________________________________
கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்ன்னு பழமொழி தெரியுமா?"
"தெரியுமே, அதுக்கென்ன இப்போ?"
"கல்யாணம் பண்றதும், வீட்டைக் கட்டறதும் பார்த்துகிட்டு இருக்கத்தானா?"
________________________________________________________________________
"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்களே…"
"ஆமாம்"
"ஆடு மாடெல்லாம் வந்து மேய்ஞ்சிடாதா?"


funnyworld-star thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக