பக்கங்கள்

திங்கள், 15 அக்டோபர், 2012

நீ ஏன் பட்டபகல்ல திருடினே ?


நீ ஏன் பட்டபகல்ல திருடினே ?


ஒரு கணவன் தன்னுடைய அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிகிறான். திருமணமாகி மூன்று மாதமே ஆன அவனுடைய மனைவி  இனிப்புடன் காத்திருக்கிறாள். கணவனை பார்த்தவுடன் "நிறைய இனிப்போடு கணவனை நெருங்கி" 
ஏங்க
ஸ்வீட் எடுத்துக்கோங்க என்றாள்.
கணவனின் முகத்தில்  வியப்பு, இன்னிக்கு என்ன விசேஷம் .... ஒன்னும் இல்லையே என்று கூறிக்கொண்டே வந்தான்...
மனைவி வெட்கத்துடன் "நான் கர்ப்பமா இருக்கேன்"   என்றாள். 

அட சந்தோஷமான விசயமாச்சே , அப்பா அம்மாகிட்ட சொன்னியா ? ..அவங்கள வர சொன்னியா என்றான்...

மனைவி, "சொல்லலை..." !!!!

கணவன், "ஏன் ?"

மனைவி, "அடிப்பாங்க..!!!"

என்னது அடிப்பாங்களா ....? என்றான் கணவன் 

அதற்க்கு மனைவி ..ஆமாங்க ...இப்படிதான் நான் காலேஜ்ல படிக்கும் போது ஒரு தடவ சொன்னேன் ..பின்னி எடுத்துட்டாங்க....!!! 


அந்த நடிகை தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு டாக்டராகவோ அல்லது
வக்கீலாகவோ நெனைச்சுட்டேதான்  நடிப்பாங்களாம்...!'
'ஆமாம் ! டாக்டர்கிட்டேயும். வக்கீல்கிட்டேயும் எதையும்
மூடி மறைக்கக் கூடாதே !


பையன் சூர்யா மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி
கல்யாணத்துக்கு சம்மதிச்சது தப்பா போச்சுடீ'
'என்னாச்சு டீ...'
'பேரழகன் சூர்யா மாதிரி இருக்கான்டி

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை. 
கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே.. 
மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன். 

நீ ஏன் பட்டபகல்ல திருடினே ?
எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல டாக்டர் வெளியில போகக்கூடாதுன்னு சொல்லிட்டார் !



ஒரு காதலி தன்னுடைய காதலனுக்கு அனுப்பிய "SMS " கீழே ,

நீ தூங்கி கொண்டிருந்தால், உன்னுடைய கனவுகளை எனக்கு பரிசாக அனுப்பி வை
நீ அழுது கொண்டிருந்தால், உன்னுடைய கண்ணீரை எனக்கு பரிசாக அனுப்பி வை 
நீ சிரித்து கொண்டிருந்தால், உன்னுடைய சிரிப்பை எனக்கு பரிசாக அனுப்பி வை 

அதற்கு அவன் திரும்ப அனுப்பியது,





ஐயோ கடவுளே... நான் இப்ப "Toilet " ல இருக்கேனே !!!!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக