பக்கங்கள்

திங்கள், 15 அக்டோபர், 2012

சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!



என்ன இந்த நாயின் விலை ஆயிரம் ரூபாயா? அநியாயமாக இருக்கே.

சார்! இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால்தான் இந்த விலை.

எதனால் இந்த நாயை மிகவும் நன்றியுள்ளது என்று சொல்கிறாய்?இதுவரை இந்த நாயைப் பத்துப் பேருக்கு விற்று இருக்கிறேன். இருந்த இடத்தை மறக்காம இங்கே திரும்பி வந்துடுச்சி, அதனால்தான்.

உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?

தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்காரே...!


அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..? கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!

பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க? அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க

என்னது உன் புருசன் எதுவுமே பேச மாடிங்கிறார்.
இப்ப அவரை சைலன்ட் மோடில் போட்டிருக்கேன்..

அவளை முழுவதும் மறக்க முடியவில்லை.., காரணம் வேற figure இன்னும் செட் ஆகல மச்சி….….

என்னங்க, நீங்க வேலைக்காரியை
நைட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி
கனவு கண்டேன்.
நல்லா தெளிவா சொல்லு,
கண்டது கனவு மட்டுமா?
இல்லை தூக்கத்துல எந்திரிச்சு
கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா?

பெண் வீட்டார்: மாப்ள என்ன பண்றார்..?
ப்ரோக்கர் : அவர் நின்றால் ரயில் ஓடும், ரயில் நின்றால் அவர் ஓடுவார்..
பெண் வீட்டார்: ஐயோ அவ்வளவு பிசியா..?
ப்ரோக்கர் : ம்ம் ஸ்டேஷன்ல சுண்டல் விக்கிறார்!!!

குஸ்கா: என்ன இவ்வளவு சோகமா இருக்கிங்க?
பிஸ்ஸா: என்னோட மனைவி கூட சண்டை, ஒரு மாசம் பேச மாட்டேன்னு சொல்லிட்டா..
குஸ்கா: நல்லதுதானே!!
பிஸ்ஸா: அந்த ஒரு மாசம் இன்னியோட முடியுது அதுதான் கவலையா இருக்கு..


எமன்: அங்கே என்ன சத்தம்.. சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன்: புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் 'ராகிங்' செய்கிறார்கள் பிரபு..!!!
"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"
"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."
"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
"பெண் அவ்வளவு அழகா?"
"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"

"பிட் அடித்து வாழ்வாரே வாழ்வார் பிட் அடிக்காதோர்-
அரியஸ் வைத்தே சாவார்" (தெருக்குறல்)


சிவப்பு மனிதனுக்கும் நிழ்ல் கருப்புத்தான்
கருப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்புத்தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை
(நாங்களும் தத்துவம் சொல்லுவம்ல)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக