நான் நடித்த படம் நூறு நாள் ஓடும்
நடிகர் :- நான்
நடித்த படம் நூறு நாள் ஓடும் என்று எனக்கு
நம்பிக்கை இருக்கு
ரசிகன் :- நூறு
நாள் என்ன சார் நூறு நாள் ,ஐநூறு நாளே ஓடும்
நடிகர் :- என்னங்க
காமடி பண்றீங்க ....
ஒருவன் :- அந்த படம்
ஓடும் தியேட்டரில் கேட்டை
திறப்பதற்கு
பத்து ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்
.
மற்றவன் ;- என்னது படம் அவ்வளவு
கூட்டமா !!!
ஒருவன்
:- இல்லப்பா ,படம் பிடிக்கலன்னு எழுந்து ஓடி
வரவங்களுக்கு
வெளியே
போறதுக்கு கேட்டை
திறக்க
லஞ்சம் கேட்கிறாங்க .
( பாரில்
)
ராமு :- இந்த பீரில்
நிறமில்லை
சோமு :- இந்த பீரில் திடமில்லை
பரமு :- இந்த பீரில்
சுவையில்லை
மாமு :-
ங்கொய்யால.... இது பீரே இல்லடா ..இது சோடா
ஒருவன் :- அந்த ரவுடிய
இந்த ஏரியா விட்டு தொரத்தரதுக்கு
ஒரு ஐடியா இருந்தா
சொல்லுங்களேன் அண்ணாச்சி
அண்ணாச்சி :- அவன எம் எல் ஏ விற்கு
நிற்க வைத்து ஒட்டு
போட்டு ஜெயிக்க
வச்சிடுங்க
ஒருவன் :- அப்பிடி
செஞ்சா
அண்ணாச்சி :- அஞ்சு வருசத்துக்கு
இந்த ஏரியா பக்கமே
வரமாட்டான்
ஹார்ட் அட்டாக் என்றால்
என்னன்னு தெரியுமா
( சும்மா காமடிக்கு
)
ஒரு
அழகான பொண்ணு உன்னை பார்த்தா உனது
இரத்தம்
சூடாகும்.
அவள் சிரித்தால் உன் ப்ளட்பிரசர்
லைட்டா அதிகரிக்க
ஆரம்பிக்கும்
அவள் உன் பக்கத்தில் வந்தால் ,உனது
இருதய துடிப்பு
அதிகரிக்கும்.
முகம் வேர்க்கும் ,நாக்கு குழறும்
.
அவள் தன்னோட அழகான உதட்டினை திறந்து
“ அண்ணா ” 13B
பேருந்து எத்தனை மணிக்கு வரும்னு
கேட்கும்பொழுது
உனது இருதயத்துல
டமால்னு
ஒரு
வெடி சத்தம் கேட்கும் பாரு
...
அதுக்கு பேருதான் ஹார்ட் அட்டாக்
.
தத்துவம்
தூங்க போறதுக்கு
முன்னாடி தூங்க போறேன்னு சொல்லலாம் .ஆனால்
தூக்கத்திலிருந்து
எழுந்து கொள்வதற்கு முன்னாடி எழுந்து கொள்ளப் போகிறேன்னு சொல்லமுடியுமா
?.
செருப்பு இல்லாம நாம
நடக்கலாம் .நாம இல்லாம செருப்பு நடக்குமா
!!!
நன்றி
விடை
நேற்றைய பதிவில் நான் கேட்ட கேள்விக்கு
பதில் இரண்டு பேர் சரியான விடை
சொல்லியிருக்கிறார்கள்
நண்பர் அம்பலத்தார்
சகோதரி கோவைக்கவி (இலங்காதிலகம்)
ஆம் இரண்டு எலுமிச்சம் பழங்கள்
அவன் பறித்தது ,வீட்டுக்கு எடுத்து
சென்றது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக