பக்கங்கள்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ஒருவன் டாஸ்மாக்

ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு 'ஹலோ' சொன்னான்..

'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'

'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'

'இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'

'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'

'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'

'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..' என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...

'என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட... நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்...

ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தான்,'எக்ஸ்கிஸ் மி சார்.. இந்த மொபைல் போன் யாரோடது...?'.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக