பக்கங்கள்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

'ஆஹா...வடை போச்சே...'



ஒரு ஜோக்:-

ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான்.
அப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா' என்று கத்தினான்.

விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான்.

பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...'
எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' .

ஆறாவது மாடி கடக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சி 'நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே...'.

மூணாவது மாடிய நெருங்கியபோது தான் தெளிவா புரிஞ்சுது, 'ஐயோ என் பேரு பீட்டரே இல்லையே...'.
விதி கடைசியில விளையாடிடுச்சி.

கடைசியிலே 'ஆஹா...வடை போச்சே...'
ஒருவனுக்கு டாக்டரிடம் இருந்து போன் கால் வந்தது..

டாக்டர்:- உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கு, சொல்லட்டுமா..

அவன்:- சரி.. நல்ல செய்தியை முதல்ல சொல்லுங்க...


டாக்டர்:- நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உயிரோட இருப்பீங்க...

அவன்:- என்ன டாக்டர சொல்றீங்க...இதுவே நல்ல செய்தி என்றால்..பிறகு கெட்ட செய்தி என்ன..?


டாக்டர்:- கெட்ட செய்தி என்னவென்றால் நான் இந்த விஷயத்தை நேற்றே உங்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.. மறந்துட்டேன்...


அவன்:- ????????????????
ஒரு பெரிய ஜோக்:-

ஒரு இன்டெர்வியு:-

ஆபிசர்:- உங்க பெயர் என்ன?
வந்தவர்:-
M.P.சார்..
ஆபிசர்:- அப்படி என்றால்..?
வந்தவர்:- மனோ பிரபு
சார்..
ஆபிசர்:- உங்க அப்பா பெயர்?
வந்தவர்:- M.P சார்..
ஆபிசர்:- அப்படி என்றால்..?
வந்தவர்:- முத்து பிள்ளை
சார்..
ஆபிசர்:- எங்க இருந்து வர்றீங்க..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- ஒ.. மத்திய பிரதேச மாநிலமா..?
வந்தவர்:- இல்ல சார்.. மன்னார்ப்பாளையம்..
ஆபிசர்:- என்ன படிச்சி இருக்கீங்க..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- என்னய்யா அது..?
வந்தவர்:- Metric Pass சார்..
ஆபிசர்:- இந்த வேலைக்கு எதுக்கய்யா வந்த?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- அப்படின்னா..?
வந்தவர்:- Money Problem சார்.
ஆபிசர்:- உங்கள பத்தி சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- ஒழுங்கா பதில்
சொல்ல போறியா இல்லையா..
வந்தவர்:-
: Magnanimous Personality சார்..
ஆபிசர்:- ஐயோ என்னால தாங்க முடியல...இத்தோட முடிச்சிக்கலாம்.. கிளம்பறியா நீ..?
வந்தவர்:- M.P சார்?
ஆபிசர்:- இந்த கேள்விக்கு என்னய்யா அர்த்தம்.?
வந்தவர்:- My Performance சார்?
ஆபிசர்:- M.P
வந்தவர்:- இதுக்கு என்ன அர்த்தம் சார்..?
ஆபிசர்:- Mentally Puncture
வந்தவர்:-??????????
 
ஒரு ஜோக்:-

ஒரு டாஸ்மாக் பாரில் இருவர்...

ஒருவன்:- ஏன்டா மச்சான் கவலையா இருக்க..?

மற்றொருவன்:- மச்சான் நான் ஒரு விதவைய கல்யாணம் பண்ணிகிட்டேன் இல்ல..அவளுக்கு ஒரு பொண்ணுடா..எனக்கு மகள் மாதிரி...அவள போய் எங்க அப்பன் கட்டிகிட்டான்டா..அதனால என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா என் அப்பன் எனக்கு மருமகன் ஆயிட்டான்டா..நான் என் அப்பனுக்கு மாமனார் ஆயிட்டேன்டா..என் மகள் எனக்கு அம்மா ஆனதால என் பொண்டாட்டி எனக்கு பாட்டி ஆயிட்டா.. நாளைக்கே எனக்கு ஒரு மகன் பிறந்தா எனக்கு மாமன் ஆயிடுவான்.. என் அப்பனுக்கு ஒரு மகன் பிறந்தா அவன் எனக்கு தம்பியா இல்லை பேரனா...மச்சான்..?

ஒருவன்:- அடப்பாவி...உன் குடும்ப குழப்பத்த சொல்லி ஏறின போதையை எல்லாம் இறக்கிட்டியேடா..

மற்றொருவன்:- பதில சொல்லுடா...


ஒருவன்:- இந்த கேள்விக்கு உலகத்துல யாராலுமே பதில் சொல்ல முடியாதுடா...ஆள விடு..
(எஸ்கேப்..)

ஒரு 'A' ஜோக்:-

பள்ளிகூடத்தில் தமிழ் வகுப்பில்..

தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்.. YESTERDAY I SAW A FILM..
மாணவன்:- நேற்று டீச்சர் 'A' படம் பார்த்தாங்க..

தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..
   ஒரு சிரிப்பு:-

பள்ளியில் இருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வரும் மகனை பார்த்து தாய் கேட்டாள்.

அம்மா:- ஏன்டா ஸ்கூல்ல இருந்து சீக்கிரமா வந்துட்ட..?

மகன்:- டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் மட்டும் தான்மா சரியா பதில் சொன்னேன்..அதான் என்னை மட்டும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க....

அம்மா:- (சந்தோசம் தாங்காமல்) செல்லகுட்டி.... என் கண்ணு....டீச்சர் அப்படி என்ன கேள்விடா கேட்டாங்க..?

மகன்:- (பத்தடி தள்ளி நின்று...) என் மேல ராக்கட் விட்டது யாருன்னு கேட்டாங்கம்மா...

அம்மா:- ??????????!!!!!!!!!1


manasaali. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக