Wednesday, June 13, 2012
விடுகதைகள் பாகம் - 3
1)
எல்லாருக்கும் கிடைக்காத மதி ஆனால் எல்லாரும் விரும்புவது மதி. அது
என்ன?
2) எரியும்
ஆனால் குளிரும் அது என்ன?
3)
ஊருக்கெல்லாம் ஒரு துப்பட்டி அது என்ன?
4) உயர்ந்த
வீட்டில் இருக்கும், ஊரார் தாகம் தீர்க்கும் அது என்ன?
5) கவிழ்ந்து
பூப்பூத்து, நிமிர்ந்து காய் காய்கும். அது என்ன?
6) அகன்ற
வாய் உடையவன், திறந்த வாய் மூடாதவன். அவன் யார்?
7) ஆளில்லாத
இடத்தில் அங்கம்மாள் குடை பிடிக்கிறாள். அவள் யார்?
8) உரித்த
கோழி, ஊரெல்லாம் சுற்றி வருகிறது. அது என்ன?
9) கணுக்கால்
நீரில் கரடி நீச்சல் போகுது அது என்ன?
10) வெள்ளைப்
பெட்டிக்குள் மஞ்சள் தங்கம். அது என்ன?
11)
விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது அது என்ன?
12) காட்டில்
கிடைத்த கட்டை, கான மழை பொழிகிறது அது என்ன?
13) வெள்ளைத்
திடல்; கறுப்பு விதை அது என்ன?
14) பச்சைச்
செடியில் தயிர்ச் சாதம். அது என்ன?
15) நாலு
காலுண்டு, வீச வால் உண்டு. அது என்ன?
16)என்னைப்
பார்த்தால் உன்னைக் காட்டுவேன். அது என்ன?
17) எங்கள்
வீட்டுத் தோட்டத்திலே மஞ்சல் யானை நிற்கும். அது என்ன?
18) குழியிலே
மலரும் குச்சியிலே தொடுக்கும், கும்பி போகும். அது என்ன?
19)
இரவெல்லாம் பூங்காடு, பகலெல்லாம் வெறுங்காடு. அது என்ன?
20)உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல்
அலைகிறாள். அவள் யார்?
விடைகள்:-
(முயற்சி செய்யுங்கள், விடைகள் அடுத்த வாரம் இதே
இடத்தில்.)
Tuesday, June 12, 2012
Monday, June 11, 2012
Saturday, June 09, 2012
கிழிபடும் இந்திய இறையாண்மை!
இந்திய பாராளுமன்றம் |
இந்திய நாடாளுமன்றத்துக்கு வயது
அறுபது. தனது அறுபதாண்டு நிறைவு நாளை அண்மையில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது இந்திய
நாடாளுமன்றம். ஒரு நாடாளுமன்றத்தின் முழுமுதற் கடமை, அந்த நாட்டின் இறையாண்மையைப்
பாதுகாப்பதுதான். இந்தக் கடமையை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றி வருகிறதா? இந்தக்
கேள்விக்கு இன்னொரு நாட்டுப் பாராளுமன்ற நடவடிக்கையோடு ஒப்பிட்டு விடை காண்பதே
சரியானதாக இருக்கும். அவ்வாறு விடை காண நாம் வரலாற்றில் ஒரு நூற்றாண்டு காலம்
பின்னோக்கி நடைபோட வேண்டும்.
இந்திய விடுதலைப் போராட்டக் காலம். இருபதாம்
நூற்றாண்டின் துவக்கம். வெள்ளையருக்கு எதிரான ஆயுதப் போராட்டம் இந்தியாவில்
மட்டுமின்றி, இந்தியாவிற்கு வெளியேயும் பல இடங்களில் மையம் கொண்டிருந்தது. அவற்றில்
ஒன்றுதான் இலண்டன் இந்தியா ஹவுஸ் மாளிகை. இந்த மாளிகை குஜராத்தைச் சேர்ந்த
செல்வந்தர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு சொந்தமானது. சிறந்த நாட்டுப் பற்றாளரான
அவர், லண்டனில் தங்கிப் படித்து வந்த, இந்திய விடுதலையில் ஆர்வம் கொண்ட, இந்திய
மாணவர்களின் விடுதியாக அதனை மாற்றிவிட்டார். இந்திய மாணவர்களின் விடுதியாக
மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராளிகளின் வேடந்தாங்கலாகவும் அது விளங்கியது.
“இந்தியன் லீக்” என்ற புரட்சிகர அமைப்பு அங்கிருந்துதான் செயல்பட்டது. மராட்டிய
மாவீரன் வீரசாவர்க்கர், தமிழகத்தின் வ.வே.சு. ஐயர், டி.எஸ்.எஸ்.ராஜன் போன்றோர் அதன்
முக்கிய உறுப்பினர்கள்.
அதே காலகட்டத்தில்,1908 ஆம் ஆண்டு வாக்கில்,
இந்தியாவிலிருந்த இங்கிலாந்து அரசாங்கம், இந்தியத் தலைவர்களைக் கடுந்
தண்டனைகளுக்கு உள்ளாக்கியது.
திலகர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டு மாந்தலேயில்
சிறைவைக்கப்பட்டார். வ.உ.சிக்கு நாற்பது ஆண்டு கால சிறைத் தண்டனை. சுப்பிரமணிய
சிவாவுக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனை. லாலா லஜபதிராய், அஜித்சிங் (பகத் சிங்கின்
சித்தப்பா) ஆகியோர் செர்மனிக்கு நாடு கடத்தப்பட்டனர். வீர சாவர்க்கரின் தமையன்
கணேஷ் தாமோதர் சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வளவுக்கும் காரணம், இங்கிலாந்து நாட்டிலுள்ள,
இந்தியாவுக்கான அமைச்சரின் ஆலோசகர் கர்சான் வில்லிதான் என்று முடிவு செய்த “இந்தியா
லீக்” அமைப்பினர் அவனுக்கு நாள் குறித்தனர்.
1909 ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள் இலண்டன் நகரின் மையப்
பகுதியில், ஜகாங்கீர் மாளிகையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு வந்த கர்சான் வில்லியை,
மாவீரன், மதன்லால் திங்கரா நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்றார். அவரைப்
பின்னிருந்து இயக்கியவர்கள் இந்தியா லீக் அமைப்பினர். குறிப்பாக வீரசாவர்க்கர்
மற்றும் வ.வே.சு.ஐயர், மாவீரன் மதன்லால் யாரையும் காட்டிக் கொடுக்காமல்
குற்றத்திற்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு, தன்னந்தனியனாய் 1909
ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் நாள் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.
“இந்தியா லீக்” அமைப்பினர் தொடர்ந்து, தடங்கலின்றி
செயல்படலாயினர். ஆனால் வீரசாவர்க்கருக்கு சிக்கல் ஒன்று தாய்நாட்டில் இருந்து வேறு
வடிவில் வந்தது. வீரசாவர்க்கரின் சகோதரர் தாமோதர் சாவர்க்கரை அந்தமானுக்கு நாடு
கடத்திய நாசிக் நகர நீதிபதி ஜாக்சனை பதினெட்டே வயது நிரம்பிய மாவீரன் ஆனந்த்
லட்சுமண் கான்கரே 1909 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று நாசிக் நகர நாடக
அரங்கில் வைத்துச் சுட்டுக் கொன்றார். இதற்காக ஆனந்த் கான்கரே 1910 ஏப்ரல் 19 அன்று
தூக்கிலிடப்பட்டார். அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனால் அவரோடு கைது
செய்யப்பட மற்றொருவன் ஆனந்த் கான்கரே பயன்படுத்திய துப்பாக்கியை அனுப்பித் தந்தது
லண்டனில் உள்ள வீர சாவர்க்கர் என காட்டிகொடுத்ததோடு அரசுத் தரப்பு சாட்சியாகவும்
மாறிவிட்டான்.
வீர சாவர்க்கர் |
உண்மையும் அதுதான். லண்டன் இந்தியா ஹவுசில் தங்கிச்
செயல்பட்டு வந்த வீர சாவர்க்கர் வெடிகுண்டு செய்யும் செயல்முறை விளக்கக்
குறிப்பையும், இருபது ரிவால்வார்களையும், ரஷ்ய புரட்சி பற்றி விவரிக்கும்
அறிக்கைகளையும், மராட்டியத்தில் உள்ள தனது சகோதரர் தாமோதர சாவர்க்கருக்கு முன்னரே
அனுப்பி இருந்தார். அவர் அனுப்பிய ரிவால்வார்களில் ஒன்றைத்தான் மாவீரன் கான்கரே
பயன்படுத்தி ஜாக்சனை சுட்டுக் கொன்றார்.
வீரசாவர்க்கரை லண்டனில், லண்டன் போலீசார் கைது
செய்தனர்.
அவரை லண்டனில் வைத்து விசாரிக்காமல் உடனடியாக
இந்தியாவிற்கு அனுப்பி அங்கே வைத்து விசாரிக்க இங்கிலாந்து அரசாங்கம் முடிவு
செய்தது. இதற்கு காரணம் இருந்தது. சாவர்க்கர் இங்கிலாந்தில் மட்டும் அல்லாமல்,
அடிக்கடி ஜெர்மன், பிரான்ஸ் சென்று அங்குள்ள இந்திய புரட்சியாளர்களுடனும் தொடர்பு
ஏற்படுத்தி இருந்தார். மேலும் இங்கிலாந்து நாட்டு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய
அயர்லாந்து விடுதலை வீரர்களுடனும் அவர் அதிக நெருக்கம் கொண்டிருந்தார். அந்த
அயர்லாந்து வீரர்கள் எப்படியேனும் சாவர்க்கரை லண்டன் போலீசாரிடமிருந்து விடுவிக்க
பல வகைகளிலும் முயன்று வந்தனர்.
எனவே 01-07-1910 அன்று எஸ்.எஸ்.மோரியா என்ற கப்பலில்
சாவர்க்கரை ஏற்றி இந்தியாவிற்கு இங்கிலாந்து அரசாங்கம் அனுப்பி வைத்தது. அந்தக்
கப்பலை எங்கும் நிறுத்தாமல் இந்தியா சென்றுவிட வேண்டும் என்பதே இங்கிலாந்து அரசின்
திட்டம். ஆனால் இந்தியா சென்று விசாரனைக்குள் சிக்கி வீணாக உயிரைவிட சாவர்க்கருக்கு
விருப்பமில்லை. அதனால் சிறையில் இருந்தபடியே வ.வே.சு.ஐயருடன் ஒரு திட்டம்
தீட்டியிருந்தார். அதன்படி எப்படியும் எஸ்.எஸ். மோரியா என்ற அந்தக் கப்பல் பிரான்ஸ்
நாட்டின் மர்சேல்ஸ் துறைமுகத்துக்கு வெளியே நின்றுதான் தீரவேண்டும். அப்போது
கப்பலில் இருந்து கடலில் குதித்து நீந்தி சாவர்க்கர் பிரான்ஸ் நாட்டுக் கரையை
அடைந்துவிட வேண்டும். மர்சேல்ஸ் கடற்கரை சாலையில் காருடன் வ.வே.சு.ஐயர்( மேடம் காமா
அம்மையாருடன்) காத்திருந்து சாவர்க்கரை அழைத்துச் சென்றுவிட வேண்டும்.
திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. ஒன்றைத் தவிர.
1-7-1910 இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்ட
எஸ்.எஸ்.மோரியா கப்பல் சாவர்க்கர் எதிர்பார்த்தபடியே 7-7-1910 அன்று இரவு வேளையில்
பிரான்ஸ் நாட்டின் மர்சேல்ஸ் துறைமுகத்துக்குச் சற்று தொலைவில் நங்கூரமிட்டு
நிறுத்தப்பட்டது. கப்பலில் ஏற்பட்ட சிறு பழுதைச் சரிசெய்யவும் எண்ணெய் நிரப்பவுமே
கப்பல் நிறுத்தப்பட்டது.
அதிகாலையில் ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரி அனுமதி
பெற்று கப்பலின் கழிவறைக்குள் சென்ற சாவர்க்கர், கழிவறையில் இருந்த குறுகிய வட்டமான
சாளரத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கடலில் குதித்து விட்டார். கண்ணாடித்
துண்டுகள் கிழித்து அவரது உடலெங்கும் குருதி வடிய கரையை நோக்கி நீந்தத்
தொடங்கினார். அவர் கடலில் குதித்து நீந்துவதைக் கண்டுகொண்ட லண்டன் போலீசார்,
அவரைச் சுடத் தொடங்கினர். சாவர்க்கர் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு
கடலுக்குள்ளேயே நீந்தி கரையை நெருங்கிவிட்டார். லண்டன் போலீசார், ஒரு படகை
கப்பலிலிருந்து கடலுக்குள் இறக்கி அதில் ஏறி அவரைத் துரத்தினர். அதற்குள்
சாவர்க்கர், கரையேறி சாலையில் ஓடத் தொடங்கினார். அவரைப் படகில் துரத்தி வந்த லண்டன்
போலீசாரும், கரையேறி, திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே அவரைத் துரத்திக் கொண்டு
ஓடினார்கள். குருதியும் கடல் நீரும் சொட்டச் சொட்ட ஓடிய சாவர்க்கரை அவருக்கு எதிரே
வந்த ஒரு பிரெஞ்சு போலீஸ்காரன், அவரை திருடன் என்று கருதி தடுத்து நிறுத்தி
விட்டான். “நான் திருடன் அல்ல. இந்திய விடுதலைக்குப் போராடும் இந்திய அரசியல்வாதி.
தஞ்சம் கேட்டு பிரான்ஸ் நாடு வந்திருக்கிறேன். என்னை உனது பிரான்ஸ் நாட்டு அரசின்
அனுமதி இன்றி லண்டன் போலீசாரிடம் ஒப்படைப்பது சட்டப்படி தவறு” என்று தனக்குத்
தெரிந்த அரைகுறை பிரஞ்சு மொழியில் அவனிடம் வாதாடினார். அதை விளங்கிக் கொள்ளாத
அந்தப் பிரெஞ்சு போலீஸ்காரன் சாவர்க்கரை லண்டன் போலீசாரிடம் ஒப்படைத்து
விட்டான்.
திட்டமிட்டபடி காருடன் வந்து காத்திருக்க வேண்டிய
வ.வே..சு.ஐயரும், காமா அம்மையாரும் மூன்று நிமிடம் தாமதமாக அங்கே வந்து
சேர்ந்ததால், சாவர்க்கரை லண்டன் போலீசார் மீண்டும் கப்பலுக்கு அழைத்துச் சென்ற
காட்சியை அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. வேதனை மீறி இருவரும்
விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள். விரைவிலேயே வேதனையையும் விம்மலையும் அடக்கிக்
கொண்டு அடுத்தகட்ட செயலில் இறங்கினார்கள்.
பிரெஞ்சு மண்ணில் கால் வைத்து விட்ட சாவர்க்கரை
லண்டன் போலீசார் கைது செய்தது சர்வதேச நியதிக்குப் புறம்பான அநீதி என்பதைப்
பத்திரிகைகள் வாயிலாக உலகறிய அம்பலப்படுத்தினார்கள்.
பாரிசிலிருந்து வெளிவரும் “எல்ஹியூமனிட்டே” என்ற
இதழின் ஆசிரியர் ஜீன் லாங்கெட் என்பவர் “பிரெஞ்சு நாட்டின் மர்சேல்ஸ் நகரில் வைத்து
சாவர்க்கரை ஆங்கிலேயர் கைது செய்தது, பிரெஞ்சு நாட்டுக்கு இழைக்கப்பட்ட அவமானம்” என
எழுதினார். இவர் காரல்மார்க்சின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல பிரான்சின் வேறுபல ஏடுகள் மட்டுமின்றி ஜெர்மனி
முதலான பல ஐரோப்பிய நாடுகளின் ஏடுகளும் பிரிட்டனைக் கண்டித்து எழுதின. வலதுசாரி,
இடதுசாரி என்ற பேதமின்றி அனைத்து பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் ஒன்று
சேர்ந்து சாவர்க்கரை பிரிட்டன் அரசாங்கம் பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும் எனத்
தீர்மானமே நிறைவேற்றின. சர்வதேச நீதிமன்றத்திற்கு இவ்வழக்குப் போனது. சர்வதேச
அரங்கில் அன்று பிரிட்டனுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக தீர்ப்பு பிரிட்டனுக்குச்
சாதகமாக அமைந்தது. சாவர்க்கர் லண்டன் போலீசாரால் இந்தியா கொண்டுசெல்லப்
பட்டார்.
ஆனால் பிரான்ஸ் நாட்டு இறையாண்மைக்கு இழைக்கப்பட்ட
அவமானமாக இதனைக் கருதிய பிரான்ஸ் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த விஷயத்தை
விட்டுவிடுவதாக இல்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி பிரான்ஸ் நாட்டுப்
பிரதமரையும் அவரது அமைச்சரவையையும் கடுமையாகச் சாடினார்கள். பல உறுப்பினர்கள்
பிரிட்டனுடன் போர் தொடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
பிரான்ஸ் பாராளுமன்றம் |
பிரான்ஸ் பிரதமர் பிரியான்ட் திணறிப் போனார். மூன்று
நாட்கள் குழம்பித் தவித்த அவர், இறுதியில் தெளிந்த மனதுடன் சாவர்க்கர் கைது
தொடர்பாக பிரிட்டனால் பிரான்ஸ் நாட்டு இறையாண்மைக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத்
தடுக்கத் தவறியதற்காகத் தார்மீகப் பொறுப்பேற்று தானும் தன் அமைச்சரவை சகாக்கள்
அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்தார்.
யாருக்காக? ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு
அடிமை நாட்டுக் குடிமகனை, அடைக்கலம் என்று தன் நாட்டு மண்ணை வந்து அடைந்தவனை
காப்பாற்ற தவறியதை தன்னாட்டு இறையாண்மையையே காக்கத் தவறிய குற்றமாகக் கருதி
பிரெஞ்சு பிரதமர் பிரியான்ட் கூண்டோடு பதவி விலகினார். அன்று உலகமே அவர் செயலைப்
போற்றியது. (ஆதாரம்: சிவலை இளமதி எழுதிய ‘சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்’
இரண்டாம் பதிப்பு- அலைகள் வெளியீட்டகம்)
இன்று விடுதலை பெற்ற இந்தியாவில் என்ன நடக்கிறது?
இந்திய குடிமக்களான தமிழக மீனவர்களை 1983 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நமது கடல்
எல்லைக்குள் ஏறிவந்து சிங்கள கடற்படை தாக்காத நாளில்லை. இதுவரை ஐநூறுக்கு மேற்பட்ட
இந்திய குடிமக்களான தமிழக மீனவர்களை சிங்களர்கள் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து
சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் காயப்படுத்தி இருக்கிறார்கள்.
பல்லாயிரம் கோடி மதிப்புள்ள படகுகள், வலைகள், மீன்களை கொள்ளை யடித்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கில் கைது செய்து கொண்டுபோயிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான மீனவர்களின்
கதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை. சிங்களனிடம் பிடிபடும் தமிழக மீனவர்கள் படும்
சித்திரவதைகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவர்களை அம்மணமாக்குகிறான். மீனவர்
படகுகளிலிருந்த இந்திய தேசியக் கொடியை சிங்களன் பூட்ஸ் கால்களில் நசுக்கி
நாசப்படுத்தி “இதைக் கோவணமாகக் கட்டிக் கொள்ளடா இந்திய வேசி மகனே” என தமிழக
மீனவர்களை துன்புறுத்துகிறான்.
பல்லாயிரம் தாக்குதல்களை இந்திய கடல் எல்லைக்குள் நமது
மீனவர்கள் மீது சிங்கள கடற்படை நடத்தியபோதும் ஒருமுறையேனும் நமது மீனவர்களின்
உதவிக்கு இந்திய கடலோர காவல்படை சென்றதே இல்லை. சிங்களன் மீது ஒரு வழக்கு இல்லை.
வாய்தா இல்லை.
கீழைக் கடலெங்கும் சிங்கள கடற்படையால் கிழிபடுகிறது
இந்திய இறையாண்மை. இந்திய நாடாளுமன்றத்தின் உச்சியில் பட்டொளி வீசிப் பறக்கிறது
பாரத மணிக்கொடி.
அன்றே தொல்காப்பியர் சொன்னபடி இரங்கலும் இரங்கல்
நிமித்தமுமாய் இன்றும் கழிகிறது எமது நெய்தல் நில மக்களின் அன்றாட வாழ்க்கை. கட்சி
வேறுபாடுகளைக் களைந்து, சாதி மத வேறுபாடுகளைத் துறந்து, ஓரணியில் திரண்டு தமிழக
மீனவர்களைக் காக்க வேண்டிய தார்மீகக் கடமை தனக்கிருந்தும் வாய்மூடிக் கிடக்கிறது
தமிழகம்.
வாழ்க பாரதம்!
நன்றி: www.siragu.com
கணக்கு புதிர் பாகம் - 1
இது ஒரு கணக்கு புதிர், கீழ்கண்ட நடை முறைகளை, பின் பற்றி கணக்கு செய்தால் விடை "2" மட்டுமே வரும்...
1) ஒரு நம்பரை மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்...
2) அதை 3-ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்
3) வரும் விடையுடன் 6-யை சேர்த்துக் கொள்ளுங்கள்
4) பின்பு மீதியை 3-ஆல் வகுத்து விடுங்கள்
5) கடைசியில் நீங்கள்
மனதில் நினத்த எண்ணால் கழித்தால் எப்பொழுதும் "2" மட்டுமே
வரும்
இவைகளும் ஒரு கணக்கு
புதிர் தான்...
Friday, June 08, 2012
Thursday, June 07, 2012
அகல் விளக்காக இரு
அகல் விளக்காக இரு;
அது முடியாவிட்டால் பரவாயில்லை.
சூரியன் மேல் சாணி அடிக்காதே!
பாதை போட
வர மறுத்தாய்; பாதகமில்லை,
பாதையில்
முள்ளையும், கண்ணாடித்
துண்டையும் தேடாதே.
சத்தியத்தின்
பாதவிலங்கை உடைத்தெறிய
முடியவில்லையா?
சங்கடப்படாதே!
பொய்யின் உதட்டுக்கு
புன்னகை தயாரிக்க
உலகை உருக்காதே!
அறத்திற்கு ஆதரவாகப்
பேசத்தவறினாய்;
அது குற்றமில்லை.
ஊளையிட்டபடி
ஓடி வராமல் உன் வார்தைகளைச்
சங்கிலியால்
கட்டிபோடக் கூடாதா?
கொடுமைக்கு எதிராக
இரத்த முழக்கம் செய்!
முடியவில்லையா?
தப்பில்லை.
அநியாங்களின்
படுக்கை அறைக்கு
ஆள் அனுப்பும் வேலை உனக்கு
நல்லதா?
மகத்தான
மானுட இசை பெருக்கில்
உன் குரலை சங்கமிக்கச் செய்!.
ஒப்பவில்லையா?
ஒதுங்கிக் கொள்.
ஒளிந்திருந்து
அபஸ்வரங்களை விட்டெறிந்து
காயங்களைக் கண்டு
கை கொட்டிச் சிரிக்காதே!
மாறாக...
குயிலோடு
உனக்குக் கோபம் என்பதால்
கழுதையிடமா போய்ச்
சங்கீதம் கேட்பாய்?
புலியோடு
முற்றிவிட்டது பகை என்றால்
போராடு! அதை விட்டு விட்டு
ஓடிப்போய்
நரியிடம் நட்புக் கொள்ளாதே.
கடலிடம்
ஒறு முறை தோற்றால்
மறு முறையும் மோது.
ஒடைகளோடு சேர்ந்துகொண்டு
அறிக்கை விடாதே!
நீ உயர முடியவில்லை
என்பதற்காக மலை மீது
கற்களை விட்டெறியாதே!
மற்றவர்களின்
மகுடங்களை மட்டம் தட்டக்
குப்பைக் கூடையைச்
சூட்டிக் கொள்ளாதே
உன் தலையில்.
உனக்கும்
உண்மைக்கும் ஊடல் என்றால்
பொய்யின் கன்னத்திலா
போய் முத்தமிட்டுக் கொண்டிருப்பாய்?
வாழ்க்கை உனக்கு
அறைகூவல் விட்டால் நீயே சமாளி!
சாவிடம் போய்
யோசனை கேட்காதே!
-ஈரோடு
தமிழன்பன்
Wednesday, June 06, 2012
விடுகதைகள் பாகம் - 2
1) அவன்
நிறம் நீலம், அவன் எல்லை நெடுந்தூரம், அது எது?
2) ஆடி, ஆடி
நடப்பான். அரங்கதிர நடப்பான் அவன் யார்?
3) ஆவணி
பிறப்பது எதனால்? நாடகம் முடிவது எதனால்?
4)
ஆண்டுதோறும் வரும் வரி. அடுத்தடுத்து வரும் வரி அது என்ன?
5) உயிரோடு
இருந்தால் சிவப்பு இறந்ததும் கறுப்பு அது என்ன?
6) ஒட்டுத்
திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன?
7) வேலியைச்
சுற்றி நீலிப் பாம்பு அது என்ன?
8) வண்ண நிலா
விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே அது என்ன?
9) வெட்ட
வெட்ட முளைக்குது தைலமெல்லாம் கேட்குது அது என்ன?
10)
முப்பத்திரண்டு காவலாளி நடுவில் ஒரு சின்னப்பெண் அது யார்?
11) மூடாத
தொட்டியில் எடுக்க எடுக்க நீர் அது என்ன?
12) போன
ரயில் திரும்ப வராது அது என்ன?
13)
மறப்புடன் வந்தது; இறப்புடன் நிற்கும் அது என்ன?
14) பரந்த
காட்டேரிக்குப் பக்கமெல்லாம் சடை அது என்ன?
15) பகலில்
தங்கத்தட்டு, இரவில் வெள்ளித்தட்டு அவை என்ன?
16) நேற்று
பிறந்தவன், இன்று கட்டுகிறான் அது என்ன?
17) நாக்கு
இல்லாதவன், நல்லது சொல்வான் அவன் யார்?
18) நெட்டி
இல்லாத வட்ட இலை அது என்ன?
19) ஒரு
எழுத்து எழுத உதவும் அது என்ன?
20)
ஒற்றைக்கால் மனிதனுக்கு எட்டுக்கை. அது என்ன?
விடைகள்:-
1) கடல் 2)யானை 3)ஆடி முடிவதால் 4)ஜனவரி, பிப்ரவரி
5)நெருப்பு 6)தோடு 7)அரைஞாண் 8)அல்லிப்பூ 9)தலைமுடி 10)பற்கள், நாக்கு 11)கிணறு
12)உயிர் 13)மூச்சு 14)ஆலமரம் 15)சூரியன், சந்திரன் 16)ஊசி 17)புத்தகம் 18)அப்பளம்
19)கை 20)குடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக