திருவாளர் கவுண்டமணி முதுமை காரணமாக திரையில் இருந்து விலகி
இருந்தாலும், அவரில்லாத இடைவெளியை இட்டு நிரப்பி, வளர்ந்து வரும் ஒருவர் , கவுண்டரை
கண்டு பிறந்த நாளுக்கு ஆசி வாங்க அவரைப் போலவே 'நக்கல் எகத்தாள காமடி' செய்துவரும்
நடிகர் அதாவது சந்தானம் சந்திக்கிறார்
*********
சந்தானம் : வணக்கம் தலைவரே, எனக்கு பொறந்த நாளு உங்களப் பார்த்து ஆசி வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்
கவுண்டமணி : எலேய் நான் என்ன முற்றும் தொறந்த சாமியாரா ? என்கிட்ட எதுக்குடா ஆசி, நித்தி சாமி, சுத்திசாமின்னு சுத்திக்கிட்டு இருந்தியே அவனுங்க தரமாட்டானுங்களா ?
சந்தானம் : (முனுமுனுப்பாக) எதோ பெருசு யாரும் கண்டுகொள்ளமல் கெடக்குன்னு பார்த்தால் எகத்தாளத்தைப் பாறேன், அது இல்லிங்க கவுந்த சாரே...இல்ல கவுண்டர் சாரே.நீங்க எனக்கு சீனியரு, நான் உங்களுக்கு ஜூனியரு ஒரு மரியாதைக்கு தான்.
கவுண்டமணி : எலே அதெல்லாம் நாலு படத்துல நடிச்சுட்டு வருங்கால மொதலைமச்சருன்னு சொல்றானுங்க பாரு அவங்க கிட்ட சீனியர் ஜூனியர் டயலாக்கெல்லாம் சொல்லு அவனுக்கு அடுத்த முதலமைச்சர் ஆனாலும் ஆவே
சந்தானம் : டேய் டோப்பாத் தலையா......ஐயோ.....நாக்கை கடித்துக் கொண்டு, கவுண்டர் சார் கவுண்டர் சார் நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் ஜெனங்க நான் தான் உங்களுக்கு ஜூனியர்னு சொல்லிக்கிறாங்க
கவுண்டமணி : அப்ப நீயும் என்னைமாதிரி புத்திக் கெட்டுப் போய் கதாநாயகனாக நடிச்சுட்டு, ஒரு நாயும் மதிக்காமல் போய் அப்பறமாக வாய்ப்புக் கெடச்சா ஒரு ரவுண்டு வருவேன்னு சொல்லுறியா ?
சந்தானம் : (குறைவான குரலில்) கெழவனுக்கு கொழுப்பைப்பாரு....., 'கவுண்டர் சார் விவேக் சின்ன கலைவாணர்னு பட்டம் போட்டுக்கிறமாதிரி....நானும் சின்னக் கவுண்டமணி' ன்னு போட்டுக்கவா
கவுண்டமணி : அடேய் ஒரு வூட்டுல ஆயிரத்தெட்டு அண்டாக் குண்டான்னு இருந்தாலும் வீட்டுக்குள்ள ஒரே ஒரு மணி தான் இருக்கும், அதுல சின்ன மணி பெரிய மணியெல்லாம் உண்டாடா ? நீ எங்கேயாவது பார்த்திருக்கியா ? வந்துட்டாரு....... நீ வேணும்னா சின்னக் குஞ்சு மணின்னு போட்டுக்க இல்லாட்டி பெரிய குஞ்சமணின்னு கூட போட்டுக்க.
சந்தானம் : 'அடிங்க்.....பல்லு போன வயசுல லொள்ளைப்
பாரு........எகத்தாளத்தைப் பாரு
கவுண்டமணி : எலேய் லொள்ளும் எகத்தாளமும் என்னமோ நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தாப்பல சொல்லிட்டு இருக்க, நான் சப்பிப் போட்ட மாங்கொட்டைய எடுத்து சப்பிக்கிட்டு இருக்கிற பய நீ என்கிட்டேயே எகத்தாளத்தப் பற்றிப் பேசுறியா ?
கவுண்டமணி : ம் எலி ஏரோப்பிளேன் ஓட்டுதுன்னு யார் யாரையோ நக்கல் அடிச்சிருக்கேன், ஆனால் இப்பதான் நேரில் பார்க்கிறேன். காட்டவெட்டி கழனித் தண்ணிக் குடிச்சாலும் குடிப்பேன் ஒரு பய கையால எச்ச டீ வாங்கிக் குடிக்கமாட்டேன்
சந்தானம் : கையால வேண்டாம்னா கையுல ஒற போட்டு வாங்கித்தரவா கவுண்டர் அங்கிள்.
கவுண்டமணி : ஐயோ அங்கிள்னு சொல்லி உறவுக்காரனாக்கி நெஞ்ச நக்குறானே, இப்ப என்ன செய்யறது.......சரி சரி நீயும் சினிமாகாரனாப் போய்ட்டே உன் ஆசையை நான் ஏன் கெடுப்பானே, நல்லவேளை பொறயோடு வாங்கிதரேன்ன்னு சொல்லி நாயாக்கமல் விட்டியே....நீயாவது நல்லாயிரு...
(மெல்லிய வாய்சில் ....எங்க பய சிங்கிள் டீ கூட வாங்கிக் கொடுக்காமல் நழுவிடுவானோன்னு நினச்சேன் ஒற போட்டு வாங்கித்தரதா அவனே மாத்திச் சொல்லிட்டான், என்ன இருந்தாலும், நம்ம பாதிப்பு இருக்கத்தான் செய்யுது.......)

சந்தானம் : அது இல்லை ஒரு வளரும் கலைஞனுக்கு வளர்ந்த கலைஞன்....
கவுண்டமணி : (கர கர குரலில்) என்னது நீ இன்னும் வளரலையா ஒங்கொம்மாக்கிட்டச்
சொல்லி காம்ப்ளானை வாங்கிக் குடிச்சுட்டு மம்மி மம்மின்னு சொல்லி எம்பி எம்பி நல்லா
குதி வளர்ந்திடுவ
கவுண்டமணி : எலேய் லொள்ளும் எகத்தாளமும் என்னமோ நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தாப்பல சொல்லிட்டு இருக்க, நான் சப்பிப் போட்ட மாங்கொட்டைய எடுத்து சப்பிக்கிட்டு இருக்கிற பய நீ என்கிட்டேயே எகத்தாளத்தப் பற்றிப் பேசுறியா ?
சந்தானம் : (மெல்லமாக) இந்தாளை ஏன் பீல்ட் அவுட் பண்ணினாங்கன்னு இப்பதான்
தெரியுது, யாரு போனாலும் கடிச்சு வச்சிடுறானே, கவுண்டர் அங்கிள் அப்ப நான் வர்றேன்
அங்கிள், சிங்கிள் டீ வேணுமா அங்கிள்....?
கவுண்டமணி : ம் எலி ஏரோப்பிளேன் ஓட்டுதுன்னு யார் யாரையோ நக்கல் அடிச்சிருக்கேன், ஆனால் இப்பதான் நேரில் பார்க்கிறேன். காட்டவெட்டி கழனித் தண்ணிக் குடிச்சாலும் குடிப்பேன் ஒரு பய கையால எச்ச டீ வாங்கிக் குடிக்கமாட்டேன்
சந்தானம் : கையால வேண்டாம்னா கையுல ஒற போட்டு வாங்கித்தரவா கவுண்டர் அங்கிள்.
கவுண்டமணி : ஐயோ அங்கிள்னு சொல்லி உறவுக்காரனாக்கி நெஞ்ச நக்குறானே, இப்ப என்ன செய்யறது.......சரி சரி நீயும் சினிமாகாரனாப் போய்ட்டே உன் ஆசையை நான் ஏன் கெடுப்பானே, நல்லவேளை பொறயோடு வாங்கிதரேன்ன்னு சொல்லி நாயாக்கமல் விட்டியே....நீயாவது நல்லாயிரு...
(மெல்லிய வாய்சில் ....எங்க பய சிங்கிள் டீ கூட வாங்கிக் கொடுக்காமல் நழுவிடுவானோன்னு நினச்சேன் ஒற போட்டு வாங்கித்தரதா அவனே மாத்திச் சொல்லிட்டான், என்ன இருந்தாலும், நம்ம பாதிப்பு இருக்கத்தான் செய்யுது.......)
govikannan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக