பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

வாய் விட்டு சிரியுங்க....


1.டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்கு ஜோசியரையும் அழைத்து வர்றாரே....ஏன்?

டாக்டர் ஆபரேஷன் செய்யும்போது..ஜோசியர் நோயாளியின் ஜாதகத்தில் மாற்றம் தெரிகிறதான்னு பார்த்துக் கிட்டு இருப்பார்.

2.கட்சி அலுவலகத்தை தலைவர் ஏ.சி. பண்ணச் சொல்லிட்டார்
ஏன்?
அவர் கிட்டே எல்லாருக்கும் குளிர் விட்டுப்போச்சாம்.

3.மருமகள்-(டாக்டரிடம்)டாக்டர் என் மாமியாருக்கு உடம்பு எப்படி இருக்கு?
டாக்டர்-பயப்படறார்போல ஒண்ணுமில்ல
மருமகள்-ஏன் டாக்டர்..எப்பவும் இப்படி நெகடிவ் ஆகவே பேசறீங்க?

4.என் பையன் போற போக்கைப் பார்த்தா கவலையாய் இருக்கு..மதிக்கவே மாட்டேன் என்கிறான்
உங்களையா?
அவன் மனைவியை.

5.போனவாரம்தான் உன் குழந்தைக்கு காதுகுத்தணும்னு லீவு கேட்டீங்க..இப்ப திரும்பவும் காது குத்தணும்னு லீவு கேட்கறீங்களே?
அப்போ..ஒரு காது தான் குத்தினோம்..இப்போ இன்னொரு காது குத்தறோம்.
எனக்கு எப்பவோ காது குத்தியாச்சு.

6.மகன்-(தந்தையிடம்)நீ காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிண்டே...என் காதலை மட்டும் எதிர்க்கிறியே ஏன்?
தந்தை-அதனால்தாண்டா எதிர்க்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக