பக்கங்கள்

செவ்வாய், 6 நவம்பர், 2012

கோகுலின் நகைச்சுவை


உங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சரி, உங்களை கம்மி-ன்னு கூப்பிடறானே, அது ஏன் சார் ?
வீட்ல எனக்கு பவர் ரொம்ப கம்மியாம், அதான் குத்திக்காட்டுறான்.
******
தலைவரே தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?
ஏன் இப்ப என்னாச்சு ?
கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான்.
******
கண்ணா உன்கூட விளையாட தம்பிப் பாப்பா, தங்கச்சிப் பாப்பா வேண்டாமாடா கண்ணா?
எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் டாடி .. .. நான் எதிர்வீட்டுப் பாப்பா கூட விளையாடிக்கிறேன்
******
என் பையன் மத்தப் பசங்களை மாதிரி ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி பாட்டெல்லாம் பாட மாட்டான், வெறும் பக்திப் பாட்டுதான் பாடுவான்.
ஆப்படியா ?
ஆமாம் ஆண்டாளு என் ஆண்டாளு .. .. திருப்பதி எழுமலை வெங்கடேசா., யப்பா யப்பா ஐயப்பா இந்த மாதிரிதான் பாடுவான்.
******
எதுக்க அவரை செருப்பால அடிச்சே ?
அவர்தாங்க, பேசிக்கிட்டிருக்கும்போதே, “அடிச்செருப்பாலே”ன்னு சொன்னார்.
******
“இது நல்லாயில்லைங்க.”
“என்னங்க நல்லாயில்ல?”
“உங்க நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டியதுதான் அதுக்காக எல்லோருக்கும் ஸ்வீட்டுக்குப் பதிலா நாய் பிஸ்கட் கொடுக்கறது அவ்வளவு நல்லா இல்லை”
******
இது பயங்கரமான திகில் படமா, எப்படிச் சொல்றே ?
‘விக்’ முடிகூட சிலுத்துக்குதே.
******
இன்றைய மெகா ஜோக்:
ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியிடம் பாமரன் ஒருவன் “என்ன சாமி செய்யறீங்க?” என்று கேட்டான்.
தாவர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் என்றார் அந்த விஞ்ஞானி.
அப்படியா “அப்போ, ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாவுறீங்க .. .?” என்று மீண்டும் கேட்டான் அந்தப் பாமரன்.

ப்ரியத்துடன்,
கோகுல்
–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
Thanks:Piravakam@googlegroups.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக