பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்


தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

இந்த ஆண்டு முதல்..பொங்கல் திருநாளை..தமிழ் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சாதாரண குடிமகனின் கவலை அதிகமானது.

அவன் கவலை..

ஏப்ரல் 14ம் நாள்..வழக்கம்போல தமிழ் புத்தாண்டு விடுமுறை என்ன ஆகும் என்பதே.,

அரசும்...இந்தநாளை விடுமுறையாக அறிவிக்கா விட்டால்..ஒரு சாரார், அதை ஒரு பிரச்னை ஆக்கிவிடுவார்களே ..என்ன செய்வது என எண்ணும் போது...

ஆபத்பாந்தவனாக..அம்பேத்கர் இருக்கிறார்.

ஏப்ரல் 14 ..அம்பேத்கார் பிறந்த நாள் ..விடுமுறை நாள்.

சாமான்யனின் கவலை தீர்ந்தது,

***** ***** ***** **** ****

சூரியனை மறைத்த கருமேகம் விலகியதால்...இப்போது சூரிய ஒளி பிரகாசமாய் உள்ளது.

திருமங்கலம் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில்..அழகிரியையும்..அவர் பேச்சையும்..சன் செய்தியில் காட்டினார்கள்.

அதற்கு கொடுக்கப்பட்ட விலை..3 தினகரன் ஊழியர் உயிர்.

***** ***** ****

தூசு தட்டி..வாங்கப்பட்ட..ஒலி/ஒளி பரப்பப்பட்ட விஜய்காந்த் படங்களை சன் என்ன செய்யும்?

அண்ணாசாமிக்கு..இந்த விஷயத்தில் சந்தேகம் நீடிக்கிறதாம்.

**** ****** ***** *****

சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..

சரத்குமார் கட்சியில் ராதிகாவின் பங்கு இருக்காது என முன்னர் சொல்லப்பட்டது..

ஆனால்..சமீபத்தில் அக்கட்சியின் துணைத்தலைவராக ராதிகா நியமிக்கப்பட்டிருக்கிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக