இறைவன் இருக்கின்றானா?
ஆண்டவன் என்று ஒருவன்
இருக்கின்றானா?
மூடநம்பிக்கை..என்று நாத்திகம் பேசும் பகுத்தறிவாளர்கள் கூட சிலசமயம் ..இறைவன் இருக்கின்றானா என தங்களுக்குள்ளாகவாவது கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.
தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.
இறைவன் இருக்கின்றானா-அவன்
இருந்தால் எங்கே வாழ்கிறான்.
நான் ஆஸ்திகன் ஆனேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகன் ஆனேன்
அவன் பயப்படவில்லை என்றும்
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
என்றும் பாடல் எழுதியிருக்கிறார்.பின் நாட்களில் அவரே ஆஸ்திகனாக மாறி கடவுள் இருக்கிறார் என்று நம்பியதுடன் ....அர்த்தமுள்ள இந்துமதம் தந்தார்.
இறை நம்பிக்கை இல்லா கலைஞரும் பல சமயங்களில் "என் ஜாதகம் அப்படி" என்று கூறியதுண்டு.
பகுத்தறிவாளரான அறிஞர் அண்ணா கூட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றிருக்கிறார்.
பின் அதுவே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்லப்பட்டது.
இதுபற்றி சத்குரு-ஜக்கி வாசுதேவ்விடம்" நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?"என்று ஒரு முறை கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில்
"கடவுள் என்று நீங்கள் எதைக்சொல்கிறீர்கள்?உங்களைச்சுற்றி படைக்கப்பட்டு இருக்கும் இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது?
எங்கே எல்லாம் படைப்பு நிகழ்கிறதோ ..அங்கல்லாம் தானே...அதோ அந்த மேகத்தில்,மணல் துகளில்,இந்த பூவில்,உங்களில்,என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத்தவிர வேறு எதை
நீங்கள் காணமுடியும்.?ஒவ்வொரு படைப்பிலும்..அதைப் படைத்தவன் இருக்கின்றான் என்பதை புரிந்துக் கொண்டால்...தினம்..தினம்..கணத்துக்கு கணம்..உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் கடவுளைக் காணலாம்.." என்றார்.
அது சரி..இந்த பதிவு எழுதும் நீ இறைவன் இருக்கிறான்..என்று சொல்கிறாயா? என்கிறீர்களா?
அதற்கு என் பதில்'நான் எங்கே அப்படிச் சொன்னேன்? ஆனால் இருந்தால் நன்றாயிருக்கும்."

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக