பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

வாய் விட்டு சிரியுங்க..


வாய் விட்டு சிரியுங்க..

1.மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
ஏன்?
கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார்

2.தயாரிப்பாளர் ஏன் இயக்குநர் மேல கோபமாய் இருக்கார்?
டூயட்டை நியூசிலாந்தில வைச்சுக்கலாம்னு சொல்லி..அங்க போயிட்டு..அங்கயும் கதானாயகி தொப்புளையே பாட்டு முழுதும் காட்டியிருக்காராம்

3.தொண்டர்கள் எறும்புபோல செயல்படணும்னு சொல்ற தலைவர்..பேரணியை நத்தைப் போல செயல்படுங்கள்னு சொல்றாரே
அப்போதுதானே..ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க 8 மணி நேரம் ஆச்சுன்னு பத்திரிகைல செய்தி வரும்.

4.தலைவருக்கு பிறந்த குழந்தை அஞ்சாநெஞ்சனா வருவான்னு எப்படி சொல்ற
குழந்தை அழும்போதே வாள்..வாள் ..என்று அழுதாம்

5.எமன்(சித்திரகுப்தனிடம்)கம்ப்யூட்டரை இயக்கி..இன்று யார் யார் உயிரை எடுக்கணும்னு கிங்கரர்களுக்குஒரு பிரிண்ட் அவுட் போட்டுக்கொடுத்திடு

6.டாக்டர்-இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும்..பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கங்க..
நோயாளி-(பொக்கைவாயைக்காட்டி) பல்லை கடிச்சுக்க முடியாதே டாக்டர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக